கோவையில் மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா சி.பி.ஆர்?!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 08:51 pm
kovai-bjp-candidate-c-p-radhakrishnan

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தூத்துக்குடி - தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கை - ஹெச். ராஜா, ராமாநாதபுரம் - நயினார் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், மத்திய கயிறு வாரியத் துறை தலைவராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1957-ஆம் ஆண்டு  திருப்பூரில் பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1998 மற்றும் 1999 -ஆம் ஆண்டுகளில் பா.ஜ. சார்பில்  கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 1998 -ஆம் ஆண்டு தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்னர் 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த சி.பி. ஆர்., தற்போது மத்திய கயிறு வாரிய தலைவராக பதவி வகிக்கிறார்.

இதேபோல, இவரை எதிர்த்து களமிறங்கும் தி.மு.க.கூட்டணியின் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜனும் கோவையில் இருந்து இரண்டு முறை எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டவராவார். எனவே, இந்தத் தேர்தலில் பா.ஜ.க., சி.பி.ஐ.(எம்) இடையே கடும் போட்டி காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close