அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு !

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:53 am
ammk-2nd-batch-candidates-list-released

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் கணேசகுமார் வட சென்னையிலும், பழனியப்பன் தருமபுரியிலும், ஞானசேகரன் திருவண்ணாமலையிலும், செந்தமிழன் ஆரணியிலும், கோமுகி மணியன் கள்ளக்குறிச்சியிலும் போட்டியிடுகின்றனர்.  ஜோதி முருகன் திண்டுக்கல்லிலும், கார்த்திக் கடலூரிலும்,  தங்க தமிழ்செல்வன் தேனியிலும், பரமசிவ ஐயப்பன் விருதுநகரிலும், புவனேஸ்வரன் தூத்துக்குடியிலும், லெட்சுமணன்ட கன்னியாகுமரியிலும் போட்டியிடுகின்றனர். 

மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில், டி.ஜி.மணி சோளிகரிலும், ராஜேந்திரன் பாப்பிரெட்டிபட்டியிலும், தங்கதுரை நிலக்கோட்டையிலும் (தனி), காமராஜ் திருவாரூரிலும், ரெங்கசாமி தஞ்சாவூரிலும் போட்டியிடுகின்றனர். ஜெயக்குமார் ஆண்டிப்பட்டியிலும், கதிர்காமு பெரியகுளத்திலும், ஜோதிமணி விளாத்திகுளத்திலும், முருகசாமி தட்டாஞ்சாவடியிலும் (புதுச்சேரி) போட்டியிடுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close