மதுரையில் வெங்கடேசன் வேட்புமனுத்தாக்கல்

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Mar, 2019 01:17 pm
cpm-venkatesan-nomination-filed

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்டடேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடந்த 19-ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை ஆர்வமாக தாக்கல் செய்து வருகின்றனர். பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்து வருவது ஒருபுறம் இருக்க, அவர்களுக்காக தலைவர்கள் பிரசாரம் செய்து வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்டடேசன், மதுரையில் தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி நடராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close