மக்களவை தேர்தலில் மக்கள் மனங்களை வெல்லப்போவது யார்?

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 04:51 pm
newstm-poll-survey

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க., - காங்., - விடுதலை சிறுத்தைகள் - முஸ்லீம் லீக் - கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தினகரனின் அ.ம.மு.க., நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாமல் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், இந்த தேர்தலில், மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர், யாரை தங்கள் தலைவராக ஏற்க உள்ளனர் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில், அ.தி.மு.க.,வும், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வும் தங்கள் கட்சிதான் தமிழகத்தில் சக்திவாய்ந்த அரசியல் கட்சி என்பதை நிரூபிக்க போராடி வருகின்றனர். 
அதே சமயம், இந்த தேர்தலுக்குப் பின், தமிழக அரசியலில் அ.தி.மு.க.,வின் தற்போதைய தலைமை காணாமல் போய்விடும், தங்கள் அணி அந்த அங்கீகாரத்தை பெறும் என தினகரன் கூறி வருகிறார். மாற்று அரசியலை முன் வைக்கும் கமலும், மக்கள் தங்களை ஆதரிப்பர் என நம்பிக்கையுடன் வலம் வருகிறார். 

யாரின் நம்பிக்கை பலிக்கப்போகிறது என்பதற்கான விடை, மே 23ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும்.

ஏப்., 18ல் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. இது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. 

இதில், எந்த கூட்டணி வெற்றி பெறும். எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். யார் மக்கள் தலைவர் என்ற அங்கீகாரத்தை பெறுவர் என்பது குறித்து, வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடலாம். தினமும், ஒவ்வொரு, எட்டு மணிநேரத்திற்கு ஒரு முறை, தேர்தல் குறித்த கேள்விகள் முன் வைக்கப்படும். 

வாசகர்கள், இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து, இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்கலாம். எட்டு மணி நேர முடிவில், வாசகர்களின் கருத்துக்களின் அடிப்படையில், கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். வாசகர்கள் அதிக அளவில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து, கருத்து கணிப்பை வெற்றி அடைய செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close