சிவகங்கையில் எச்.ராஜாவை ஜெயிக்க வைக்காமல் முதல்வர் முகத்தில் முழிக்க மாட்டோம்: அதிமுக அமைச்சர் சூளுரை!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 12:54 pm
admk-minister-challenge-for-h-raja

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஜெயிக்க வைக்காமல் நாங்கள் முதல்வர் முகத்தில் முழிக்க மாட்டோம் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இது தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

பாஜகவுக்கு கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக முதல்வர் உள்பட அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார்.

விழாவிற்கு பின்னர் பேசிய அவர், சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றிபெற வைக்கவில்லை என்றால் முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று அதிமுகவினர் சபதம் ஏற்றுள்ளோம் என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close