ஜெயலலிதாவை மறந்துவிட்டு, மோடியை வணங்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: ஸ்டாலின் பேச்சு

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Mar, 2019 04:40 pm
mk-stalin-campaingn-in-arur

ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு, மோடியையும், அமித்ஷாவையும் வணங்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

தருமபுரி மாவட்டம் அரூரில் இன்று மக்களவை, இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டதாகவும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு, மோடியையும், அமித்ஷாவையும் வணங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், முதல்வர் பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'மோடியா, இந்த லேடியா என கேட்டவர் ஜெயலலிதா; அதை மறந்துவிட்டு பாஜகவுடன் பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை திமுகவையே சேரும். நீட் தேர்வை அதிமுக அரசால் ரத்து செய்ய முடிந்ததா?, 7 தமிழர் விடுதலையை அதிமுக அரசால் சாதிக்க முடிந்ததா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முதல்வர் பழனிசாமியை புகழக்கூடிய புலவராக தற்போது ராமதாஸ் மாறியிருக்கிறார் என்றும், ஜெயலலிதாவை திட்டித் தீர்த்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸேர்டு பழனிசாமி கூட்டு வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close