நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி !

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Mar, 2019 01:45 pm
rs-29-84-crores-seized-by-election-flying-squad

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று  சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்குகள் முடிந்துள்ளன; அரவக்குறிச்சி மட்டும் நிலுவையில் உள்ளது. காலியான தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயாராகவுள்ளோம்' என்றார்.

மேலும், தமிழகத்தில் பறக்கும் படையால் நேற்று வரை ரூ.29.84 கோடியும்,  இன்று மட்டும் ரூ.10.72 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவம் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட  209.53 கிலோ தங்கத்தில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 310 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 253 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close