திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ; இந்தியாவின் வில்லன் மோடி: உதயநிதி

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 05:29 pm
udhayanidhi-stalin-speech-against-pm-modi

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. அதை எல்லோரும் பார்த்து பயப்படுகிறார்கள் என்று பிரச்சாரத்தின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

சேலம் உடையாப்பட்டி பகுதியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசிய அவர், "பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என கூறி விட்டு ஏமாற்றி விட்டார்.

தமிழகத்திற்கு ஒகி, கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்போது ஒருமுறை கூட வராத மோடி  ஓட்டுக்காக தமிழகத்திற்கு 4 முறை வந்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. அதை எல்லோரும் பார்த்து பயப்படுகிறார்கள். தேர்தலில் ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார். இந்தியாவின் வில்லன் மோடி தான், அவருக்கு கைக்கூலி என்று இருவர் இருக்கிறார்கள்.

மேலும், விவசாயிகளை பாதிக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் தடை செய்யப்படும்.

எடப்பாடி பழனிசாமி பற்றி  கடுமையான விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸுடன்  சேர்ந்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதேபோன்று தேமுதிக விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே இடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா குறித்து கடுமையான விமர்சனம் வைத்த விஜயகாந்துடன் கூட்டணி வைத்தது குறித்து வருந்துகிறேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும், ஓட்டுக்காகவும் தான் என்று தெரிவித்த அவர். அதிமுக கூட்டணி கட்சிகள் மக்களிடம் வந்தால் மக்கள், அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close