மார்ச் 25ல் சிவகங்கையில் வேட்புமனுத் தாக்கல்: ஹெச்.ராஜா தகவல்!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 05:40 pm
h-raja-will-be-filing-nomination-on-mar-25

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, வருகிற மார்ச் 25ம் தேதி சிவகங்கையில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோயம்புத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

அதன்படி, சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஹெச்.ராஜா வருகிற மார்ச் 25ம் தேதி சிவகங்கையில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close