ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு

  டேவிட்   | Last Modified : 24 Mar, 2019 07:18 am
admk-s-complaint-will-be-inspected-sathya-pratha-sahoo

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அளித்துள்ள அதிமுகவின் புகார்கள் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அவதூறான கருத்துகளைக் கூறி வருவதாகவும், இது சம்பந்தமான ஆதாரங்களுடன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கடந்த 22ஆம் தேதி புகார் மனு அளித்தார். 

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரத சாகு,  தேர்தல் தொடர்பாக எந்தவிதமான புகார்கள் வந்தாலும் அவை சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலி முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக அதிமுக அளித்துள்ள புகார் மனு குறித்தும் ஆய்வு செய்ய திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவம் குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close