திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்: விருதுநகர் வேட்பாளர் பேட்டி

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Mar, 2019 08:24 am
the-dmk-will-be-headed-by-the-leadership-in-tamil-nadu

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'ராகுல் காந்தி தலைமையில் என்னை விருதுநகர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  இதற்கு முன்னதாக நான் விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளேன் ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியினுடைய மிக முக்கியமான அறிக்கை விவசாயிகளின் கடன் தள்ளுபடி. உண்மையான ஜிஎஸ்டி குறைந்தபட்ச உத்திரவாதம் வருமானத்தை கொண்டு வருவோம்.தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்' என்றார். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close