இந்த காலத்தில் ஸ்டாலின் இப்படி சொல்லலாமா - பொன்.ராதா கிருஷ்ணன்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Mar, 2019 12:05 pm
stalin-say-this-during-this-period-pon-radha-krishnan

அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும் மாற்றிக் கொள்வதும் இயல்பு தான், இந்த காலத்தில் அடகு வைத்துவிட்டார்கள் போன்ற வார்த்தைகள் சொல்வது ஏற்புடையதல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரூரில் நேற்று மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் என்று விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில், ஸ்டாலின் விமர்சனம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும் மாற்றிக் கொள்வதும் இயல்பு தான் என்றும், இந்த காலத்தில் அடகு வைத்துவிட்டார்கள் போன்ற வார்த்தைகள் சொல்வது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close