திமுகவை பற்றி பேசியே எனது தொண்டை வறண்டுவிட்டது: பழனிசாமி

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Mar, 2019 12:47 pm
speaking-of-the-dmk-my-throat-was-drying-up

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பிரச்னைகளை சொல்லியே தனது தொண்டை வறண்டு விட்டதாக முதல்வர் பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளார்.

பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக வேலூர் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முதல்வர் பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 'நான் முதல்வராக பதவியேற்றது முதல் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பிரச்னைகளை சொல்லியே எனது தொண்டை வறண்டு விட்டது. அதிமுக குரல் கொடுத்ததால் தான் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி சந்தர்பவாத கூட்டணி. நாங்கள் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்; எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி' என்றார்.

மேலும், கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு, எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்; கூட்டணியில் இருந்தாலும் எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம் என்ற முதல்வர், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது அக்கட்சி மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியாதா? என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close