வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Mar, 2019 01:57 pm
ammk-wins-lok-sabha-eletion

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப்போல் வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் என்று,  தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தமிழகத்தில் ஆளும் அரசையும், பாஜகவையும் மக்கள் ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப்போல் வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்' என்றார்.

மேலும், தேனியில் நியூட்ரினோ திட்டத்தினை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அமமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close