விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பிரசாரம் செய்வார்: பிரேமலதா

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 08:30 pm
vijaykanth-will-campaign-premalatha

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார் என கருதப்பட்ட நிலையில், அவர் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா வரும் 26ம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி சார்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து சந்தேகம் இருந்தது. அதுகுறித்து பேசிய பிரேமலதா, "கேப்டன் விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், அவரது முகத்தை காட்டினால் மக்கள் வாக்களிப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close