என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை: கார்த்தி சிதம்பரம் தைரியப் பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 07:37 am
siva-gangai-congress-candidate-karthi-chidambaram-bite-in-chennai

என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூப்பிக்கப்படவில்லை என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பண மோசடி வழக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு என பல்வேறு வழக்குகளில், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், சிவகங்கை தொகுதி  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. திமுகவின் ஆதரவுடன் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்" என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

தன் மீதான பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே உள்ள  கார்த்தி சிதம்பரம் இப்படி தைரியமாக பேட்டி தருவதும், அவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ளதும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் பற்றிய அக்கட்சியின் பார்வைதான் என்ன? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close