அதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 09:51 pm
sivagangai-people-feel-shocking-ex-minister-sudarsana-naachiyappan

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது அத்தொகுதியின் ஒட்டுமொத்த மக்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் மேலும் கூறியது:
மத்திய அமைச்சராக நான் இருந்தபோதும், என்னுடைய வளர்ச்சியை தடுத்தவர் ப.சிதம்பரம். அவருடைய குடும்பம், சிவகங்கை தொகுதிக்கு நன்மை எதுவும் செய்யாமல், வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது.

சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுத்துவரும் நிலையில், சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது. கட்சியின் இந்த அறிவிப்பு,  அத்தொகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

கடந்த 1999-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் , சிவகங்கை தொகுதியில்  இவர் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close