ஒசூர் இடைத்தேர்தல் : கர்நாடகத்திலிருந்து களமிறங்கும் அமமுக வேட்பாளர்!

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Mar, 2019 10:40 am
housur-by-election-candidate-pugalendhi-dinakaran-announced

ஒசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில், கர்நாடக மாநில அமமுக செயலாளரான புகழேந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவின் வேட்பாளர் பட்டியலை, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதில், ஒசூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் புகழேந்தியும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.தமிழ்மாறனும் போட்டியிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளாராக இருக்கும் மைக்கேல் ராயப்பன், தேமுதிகவில் இருந்து அதிமுகவிற்கு மாறி, பின்னர் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close