தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 03:46 pm
nayanthara-thanks-to-mk-stalin

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' பட ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது, நயன்தாராவை புகழ்வது போல தகாத வார்த்தைகளால் விமர்சித்து பேசினார். இது திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர்கள் விஷால், சித்தார்த், நடிகைகள் ராதிகா, சின்மயி, டாப்ஸி உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். 

இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். அதனை ஏற்று, நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். 

இதையடுத்து, நடிகை நயன்தாரா இந்த சம்பவம் தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close