சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தானும் தனது தந்தையும் தவறேதும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ' நானும், எனது தந்தை ப.சிதம்பரமும் தவறேதும் செய்யவில்லை. அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதால் தந்தை மீது மத்திய அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது" என்றார்.
மேலும், வாரிசு அரசியல் எனக் கூறுவது தவறு; நான் தற்போது சந்திக்கவுள்ளது 11-ஆவது தேர்தல் எனக் கூறிய அவர், பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா யார் என்பதே எனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
newstm.in