அதிகம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதி இதுதான்!

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 10:34 pm
tn-mp-election-total-nomination-count

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் மொத்தம் 1003 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 880 பேர், பெண்கள் 121 பேர் மற்றும் திருநங்கைகள் 2 பேர் அடங்குவர். அதிகபட்சமாக, தென்சென்னை தொகுதியில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1003 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, திருவண்ணாமலை தொகுதியில் 43 பேர் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, கரூர்,  தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தலா 41 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

389 பேர்: இதேபோன்று, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு மொத்தம் 389 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 324 பேர் மற்றும் பெண்கள் 65 பேர் அடங்குவர்.

அதிகபட்சமாக, சென்னை பெரம்பூர் தொகுதியில் 59 வேட்பு மனுக்களும், இதற்கு அடுத்தப்படியாக சாத்தூர் 42, நிலக்கோட்டை 41 மற்றும் திருவாரூரில் 39 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close