மதுரை - வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 02:25 pm
madurai-candidates-nominations-acceptance

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட 28 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் மனுவிற்கு சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பரீசிலனை மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  

அப்போது வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் விவரம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் அறிவித்தார். அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மனுவில் சிறிது பிழைகள் உள்ளதாகவும் ஆனால் வேட்புமனுவினை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தத‌ற்கு சுயேட்சை வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் , அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, நாம் தமிழர் கட்சி , மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

 இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்ட‌தாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். வேட்புமனுக்களை வரும் 29-ஆம் தேதி மதியம் 3 மணி வரை திரும்பபெற்றுகொள்ளலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close