5 வருடம் கழித்து இப்போது தான் ஏழைகளின் முகத்தில் சிரிப்பு தெரிகிறது - ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 03:56 pm
stalin-support-to-ragul-gandhi-income-scheme

திமுக - காங்கிரஸ் கூட்டணியால் ஜூன் 3-ஆம் தேதிக்கு பிறகு ஏழைகள் நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை உருவாகும் என்றும், ராகுல் காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திமுக - காங்கிரஸ் கூட்டணியால் ஜூன் 3ஆம் தேதிக்கு பிறகு ஏழைகள் நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை உருவாகும். ராகுல் காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டம் ஏழைகளுக்கு வரப்பிரசாதம் மட்டுமல்ல. ஒரு அட்சய பாத்திரமாகும். ராகுல் காந்தியின் அறிவிப்பால் ஏழைகளின் முகத்தில் 5 வருடம் கழித்து இப்போது தான் சிரிப்பைக் காண முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு ஏழைகளுக்கான எந்த ஒரு திட்டதையும் அறிவிக்கவில்லை. குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த முடியாது என பாஜக சொல்வது எரிச்சலின் வெளிப்பாடே’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close