கனிமொழி, தமிழிசையின் வேட்புமனுக்கள் ஏற்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 04:29 pm
kanimozhi-tamilisai-nominations-accecpted

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரின் வேட்புமனுக்கள்  நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டன.

கனிமொழி, தனக்கு வாக்காளர் அடையாள அட்டை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மற்றும் தூத்துக்குடி நகரில் உள்ள ஓர் முகவரி ஆகிய இரண்டு இடங்களில் உள்ளதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாக புகார் கூறப்பட்டது. அதேபோல தமிழிசை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கவுரவ இயக்குநராக இருப்பதை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனவும் எதிர்தரப்பிலிருந்து புகார் கூறப்பட்டது. 

இதையடுத்து,  நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு இருவரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக  அந்த மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close