எந்த கட்சியும் தேர்தல் அறிக்கையை 100% நிறைவேற்றுவதில்லை

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 05:56 pm
any-party-does-not-perform-100-election-manifesto

எந்த கட்சியும் தேர்தல் அறிக்கையை 100%  நிறைவேற்றுவதில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

ர்தல் பிரச்சாரத்திற்காக கோவை செல்லும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற தேர்தலில் தங்களுடைய கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும், அப்போது தமிழகத்தின் தேவைகள் அனைத்தையும் கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பெற்று தருவோம் எனவும் தெரிவித்தார்.

தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுப்பது கலாச்சாரமாக மாறிவிட்டது என்ற அவர், தேர்தல் விதிமீறல்களை மீறுவதg கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

மேலும், வலிமையான பிரதமராக மோடி இருந்து வருகிறார் எனவும், புல்வாமா தாக்குதலில் பிரதமர் எடுத்த நடவடிக்கையில் இருந்து அது வெளிப்படையாக தெரிந்தது எனவும் தெரிவித்த அவர், தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடும் அனைத்து வாக்குறுதிகளையும் 100% எந்தக் கட்சியும் நிறைவேற்றுவதில்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close