திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது - முதல்வர் பழனிசாமி

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 06:25 pm
did-not-fulfill-the-promises-made-by-said-dmk-chief-minister-palanisamy

திமுக மத்தியில் ஆட்சியில் பங்குபெற்ற பின்னர், அக்கட்சி தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று, சென்னையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘திமுக மத்தியில் ஆட்சியில் பங்குபெற்ற பின்னர் அக்கட்சி,தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது. போரூரில் ரூ.11.71 கோடி மதிப்பில்  நகர்ப்புற சமுதாய மருத்துவமனை, மதுரவாயலில் ரூ.8.96 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போதய ஆட்சியில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என பெருமிதத்துடன் அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close