குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 10:18 pm
the-end-of-the-family-hegemony-should-end-stalin

குடும்பம் ஆதிக்கம், குடும்ப வாரிசு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று, தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் மேலும் பேசிய அவர், '2 முறை முதல்வராக்கிய ஜெயலலிதாவுக்கு என்ன விஸ்வாசத்தை காட்டினார்  ஓ. பன்னீர்செல்வம்?. ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது?  குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறிய ஓபிஎஸ், தற்போது மகனுக்கு சீட் வழங்கியது ஏன்?' என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என்றும், பொள்ளாச்சி வழக்கை திசை திருப்பவே தற்போது திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close