கோவை தொகுதியில் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Mar, 2019 10:29 pm
15-candidates-nomination-acceped-in-kovai

கோவை தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 38 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல, பொள்ளாச்சி  மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 41 மனுக்களில் பேர் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன

தெளிவான ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொள்ளாச்சியில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்விற்கு முன் அனுமதி இல்லாமல் இடம் அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close