பிரதமர் மோடி 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறார்: பியூஸ் கோயல்!

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Mar, 2019 08:00 am
prime-minister-modi-has-been-work-for-people-for-24-hours

விவேகானந்தர் கனவை நனவாக்க 120 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தலைவர் உருவெடுத்துள்ளார் என்று, மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல், 'பிரதமர் மோடி 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறார்.விவேகானந்தர் கனவை நனவாக்க 120 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தலைவர் உருவெடுத்துள்ளார். 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த குடும்பத்தால் வறுமையை ஒழிக்க முடியவில்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இன்று  நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close