இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Mar, 2019 11:46 am
the-final-list-of-candidates-is-released-tomorrow

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை,  இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுத்தாக்கல் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில், நேற்று, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு, மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இறுதிப் பட்டியலுக்கு பின்னர் நாளை வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சின்னம் ஒதுக்குவார்கள். ஒரே சின்னத்தை ஒருவருக்கு மேற்பட்டோர் கோரினால் குலுக்கல் முறையில் தேர்தல் சின்னம் வழங்கப்படும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close