ராகுலின் அறிவிப்பால் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது: ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Mar, 2019 01:03 pm
modi-is-afraid-of-rahul-announcement-stalin

பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி  அடையவில்லை; தளர்ச்சிதான் அடைந்திருக்கிறது என்று, மதுரை வண்டியூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

பிரச்சாரா கூட்டத்தில் மேலும் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் மட்டுமே   நடப்பட்டுள்ளது; இதுவரை  நிதி ஒதுக்கவில்லை. உத்தர பிரதேச எய்ம்ஸ்க்கே நிதி ஒதுக்காத மோடி தமிழக எய்ம்ஸ்க்கு எப்படி நிதி ஒதுக்குவார்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வேலைவாய்ப்பின்மையை அதிகரித்ததே மோடி அரசின் சாதனை என குற்றம்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகை என்ற அறிவிப்பால் மோடிக்கு அச்சம் வந்துவிட்டதாகவும், ராகுல் காந்தி அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை தான் வழிமொழிவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close