வாக்கிங் செய்து கொண்டே பிரச்சாரம் செய்த ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 08:33 am
stalin-campaign-in-madhurai

’14 வயதில் அரசியலுக்கு வந்தவன் நான், அந்த நாள் முதல் மக்களோடு மக்களாக இருக்கிறேன்’, என்று மதுரையில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பகுதியில் இன்று அதிகாலை  திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர், மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளார் சு.வெங்கடேசனை ஆதரித்து, அங்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 14 வயதில் அரசியலுக்கு வந்த நாள் முதல் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்றும், எம்.எல்.ஏ., மேயர், தற்போது திமுக தலைவர் என அனைத்து  நிலைகளிலும் மக்களுடன் இருந்து வருகிறேன் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தற்போது, கோடை காலம் என்பதால், வெயிலில் பிரச்சாரம் மேற்கொள்ளாமல், அதிகாலை, காலையில் மக்களை சந்தித்து தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close