டோக்கன் கொடுத்த அமமுகவுக்கு ’பரிசுப்பெட்டி’ சின்னம் செம பொருத்தம் - அமைச்சர் விமர்சனம்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 09:08 am
gift-box-symbol-ammk-minister-rajendra-balaji-critisicism

டோக்கன் கொடுத்த அமமுகவுக்கு ’பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டது பொருத்தமாக உள்ளது என்று பால்வளத்துறை துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

 மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ’பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  ’பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கியதை கடிதம் மூலமாக தினகரன் தரப்புக்கு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமமுகவிற்கு  ’பரிசுப் பெட்டி’ சின்னம்’ ஒதுக்கியது பற்றி பால்வளத்துறை துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

டோக்கன் கொடுத்த அமமுகவுக்கு ’பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கியது பொருத்தமானது என்றும், இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்; அமமுகவினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுக, பாஜக சின்னங்கள் மக்களிடம் ஏற்கனவே பிரபலமானவை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close