ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி! - டெல்லி உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 11:11 am
kc-palanisamy-plea-dismissed-by-delhi-high-court-against-ops-eps

அதிமுகவின் வேட்புமனுவில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட தடை கோரி கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை இன்று  டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரண்டு பதவிகளை உருவாக்கியதற்கும், தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் 'ஏ மற்றும் பி' படிவத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கையெழுத்திட தடை கோரி, அதிமுகவில் இருந்து விலகிய கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close