'நானும் விவசாயி தான்' - பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு !

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 11:15 am
i-am-farmer-cm-campaign

’நானும் விவசாயி என்பதால்  நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்’ என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், ‘நானும் விவசாயி என்பதால்  நீராதாரங்களை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். 3200 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன; எஞ்சிய ஏரிகளும் விரைவில் தூர்வாரப்படும்’ என்று பேசினார்.

மேலும், கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close