2023-ஆம் ஆண்டிற்குள் மக்களிடம் வீடுகள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 11:38 am
year-2023th-houses-in-peoples-hand-pannerselvam-said

ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் வீடுகள் வழங்கப்படும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘காங்கிரஸ்- திமுக கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. மக்கள் நலன்நாடும் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. எந்த கட்சி நல்ல திட்டங்களை கொண்டுவந்தது என சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

மேலும், ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் வீடுகள் வழங்கப்படும் என்று பேசிய துணை முதலமைச்சர், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close