ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் - ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 12:55 pm
h-raja-go-parliament-will-be-damaged-by-its-holiness-stalin

ஹெச்.ராஜா போன்றவர்கள்  நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சிவகங்கை அரண்மனைவாசலில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் துணையுடன் பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

மேலும், திராவிட இயக்கத்தை இழிவுப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பேசிய அவர்,  ஹெச்.ராஜா போன்றவர்கள் நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close