குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது: தேர்தல் அதிகாரியிடம் டிடிவி தினகரன் மனு!

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 12:54 pm
cooker-symbol-should-not-given-to-any-parties-ttv-dinakaran-letter-to-election-commission

தனது கட்சிக்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கியதையடுத்து, முன்னதாக உபயோகித்த குக்கர் சின்னத்தை எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என அமமுக சார்பில் டிடிவி தினகரன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று கடிதம் அளித்துள்ளார். 

நாடளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ’பரிசுப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அமமுகவிற்கு, குக்கர் சின்னத்தை ஒதுக்காமல் அதற்கு மாற்றாக  ’பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து, முன்னதாக அமமுக கட்சி உபயோகித்த குக்கர் சின்னத்தை, நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் சின்னமாக ஒதுக்கக்கூடாது என டிடிவி தினகரன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் இன்று கடிதம் அளித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close