அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: முரளிதர ராவ்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 08:10 am
aiadmk-bjp-alliance-will-be-a-big-success-muralidhar-rao

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.    

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  முரளிதர ராவ், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், தமிழகத்தில் மிகுதியான எதிர்பார்ப்புடன் வெற்றியை எதிர்நோக்கி உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்தவொரு கொள்கையும் தலைமையும் இல்லாமல் செயல்படுகிறது என்ற அவர், மக்களவை தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close