100 நாள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 10:45 am
100-day-works-will-be-increased-to-200-days

100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொள்ளிடத்தில் இன்று, மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மழை நீரை சேமிக்க ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன.  2 லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெறலாம் என இருந்த காப்பீட்டுத் திட்டதை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளோம்’ என்றார்.

மேலும், 100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close