நாடு செழிக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முதல்வர் பழனிசாமி!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 11:41 am
modi-again-prime-minister-cm-palanisamy

நாடு செழிக்க, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனுக்கு ஆதரவாக வேதாரண்யத்தில் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 'நாடு செழிக்க, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைய, திறமையான, வலிமையான பிரதமரை தேர்வு செய்ய வாக்களியுங்கள். திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றியதில்லை' என முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "சென்னையில் 2000 ஏக்கரில் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது எனவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close