பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என்பதா? - பொன்.ராதா கேள்வி

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 01:50 pm
ponradha-quetion-to-dmd-dhuraimurugan-raid-issu

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தேர்தல் செலவிற்காக பணத்தை குவித்து வைத்து விநியோகிப்போரை தடுத்தால் தோல்வி பயம் எனக் கூறுவதா? என்று திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பணப்பட்டுவாடா சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது;  இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர், காங்கிரஸ் வேட்பாளார் வசந்தகுமாரின் நிறுவனங்கள் மூலம் பணம் தரப்படுவதாக தகவல் வருகிறது என்று கூறியுள்ளார்.

 ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளர்களைத் தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close