தேர்தல் முடிந்ததும் ரூ.2000 வழங்கப்படும்: முதல்வர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 11:21 am
rs-2-000-will-be-given-after-the-election-chief-minister-palani

தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டையில், திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். 

அப்போது பேசிய அவர், ‘ நாட்டில் நிலையான ஆட்சி அமைக்கும் திறனுள்ளவர் பிரதமர் மோடி. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே நமது கூட்டணி கட்சிகளின் லட்சியமாகும். கோதாவரி - காவிரி மற்றும் காவிரி - கொள்ளிடம் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், "தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், சிறப்பான சிகிச்சையால் தமிழகத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது" எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close