நான் இந்துகளுக்கு எதிரானவன் இல்லை - ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 01:47 pm
i-m-not-anti-hindus-stalin

நான் இந்துகளுக்கு எதிரானவன் என பரப்புகிறார்கள்; ஆனால் என் மனைவி கோவிலுக்கு செல்வதை இதுவரை நான் தடுத்தது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சோளிங்கரில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது , நான் இந்துகளுக்கு எதிரானவன் என்று பரப்புகிறார்கள் என்றும், என் மனைவி கோவிலுக்கு செல்வதை இதுவரை தடுத்தது இல்லை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா, பாமகவை வன்முறை கட்சி என்று கூறி எதிர்த்தவர் என்ற அவர், தமிழ்நாட்டுக்கு கருணாநிதி உதவும் கரமாகவும் இருந்தவர்; ஆனால், எடப்பாடி பழனிசாமி உதவாத கரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close