நாடு வல்லரசு ஆவதற்கு காங்கிரஸ் தடை: சரத்குமார்

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:50 am
congress-banned-from-becoming-a-superpower-country-sarath-kumar

திமுக - காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று, சேலத்தில் இன்று பிரச்சாரம் செய்த சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவாக சேலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய சமக தலைவர் சரத்குமார், "திமுக - காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், நான்கு தலைமுறையாக காங்கிரஸ் நாட்டை வஞ்சித்துள்ளதாகவும், நாடு வல்லரசு ஆவதற்கு காங்கிரஸ் கட்சி தான்  தடையாக இருந்ததாகவும், மோடி தலைமையில் நல்லாட்சி அமைந்தால் தான் மாநிலத்திற்கும் வளர்ச்சி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஸ்டாலின் மேடை தோறும் அதிமுக கூட்டணியை அநாகரிகமாக பேசுகிறார் என்றும், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நடத்தி வருகிறார் எனவும் சரத்குமார் தெரிவித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close