சிறுபான்மையின மக்களை காத்து வரும் அதிமுக அரசு: முதல்வர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 06:12 pm
the-aiadmk-to-protect-the-minority-people

சிறுபான்மையின மக்களை காத்து வரும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக மேலப்பாளையத்தில் இன்று முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “எந்த திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அதை மட்டுமே அறிவித்து  நிறைவேற்றி வருகிறோம் என்றும், திமுக தேர்தல் அறிக்கை பொய்யான, போலியான அறிக்கை; அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை  நிறைவேற்றி வருகிறோம் என்றும் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் மக்கள் அமைதியாக வாழமுடியும் என்று பேசியுள்ளார்.

மேலும், சிறுபான்மையின மக்களை காத்து வரும் அரசாக அதிமுக அரசு இருந்து வருவதாகவும், ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு  நிறுத்தியபோது, சிறுபான்மையின மக்களின் கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு உதவி செய்ததாகவும், தமிழகத்தில் ஏழைகள் இல்லாத  நிலையை உருவாக்க அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close