வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தெற்கில் ராகுல் போட்டி: இல.கணேசன்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:22 pm
rahul-can-not-win-in-the-north-contest-in-the-south-ila-ganesan

வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்திய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்திய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம், ராகுல் போட்டியிடும் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளவை பொருளாதார ரீதியாக சாத்தியமாகாது. பாஜகவுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. கீ.வீரமணி போன்ற பெரியவரிடமிருந்து கிருஷ்ணர் குறித்த கருத்தை எதிர்பார்க்கவில்லை"என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close