நேர்மையே உன் பெயர் கறுப்பா?

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Apr, 2019 12:05 pm
the-name-of-the-honest-is-black-special-story

இந்திரா காலத்தில் முக்கிய பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை, சிபிஐ சோதனை நடந்தால், காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்காத்தான் இந்த ரெய்டு என்று விமர்சனம் எழும். அதை உண்மை என்று நிரூபிப்பது போல சிலர் அந்த கட்சியிலும் சேர்ந்து இருக்கிறார்கள். அவருக்கு பின்னர் வந்த பிரதமர்கள் வேறு வேலைகள் இருந்ததால் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கவில்லை. 

அதன் பிறகு  இது போன்ற சோதனைகள் சமீபகாலத்தில் அதிகம் நடக்கிறது. சமீபத்தில் வேலுாரில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனைக்கு அடிப்படை காரணம் வேடிக்கையானது. 

திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் 1.5 லட்சம மொய் கவர்களை ஒரு கடையில் வாங்க, அந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தன் அடிப்படையில் வருமானவரித்துறை துரைமுருகன் வீட்டில் சோதனையிட்டுள்ளது. அப்போது அவர்கள் கையில் எதுவும் சிக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் சொல்லி வைத்தபடி (கட்சிக்காரின் உள்குத்து என்கிறார்கள்) மூட்டை மூட்டைகளாக பணம் அள்ளப்பட்டிருக்கிறது. ஏழைகள் ஒருநாள் சோறாவது நன்றாக சாப்பிட்டும், அந்த நன்றிக்கடனுக்காக ஒரே ஒரு ஓட்டு போடட்டும் என்று அன்புடன் நினைத்த துரைமுருகன் அம்போவாகிவிட்டார். 

திருச்சியில் எல்பின் என்ற நிறுவனம் உள்ளது. இது ரியல் எஸ்டேட், தொழில் முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை என பலவித தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் பொதுமக்களை கோடிக்கணக்கில் ஏமாற்றவிட்டதாக வழக்கு உள்ளது. இதன் உரிமையாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில துணை செயலாளர் ராஜா, அவர் தம்பியும் அக்கட்சியின் அச்சு ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர். இதில் ராஜாவை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம் போன்றவற்றை பிடுங்கி கொண்டு விரட்டிய சம்பவமும் நடந்தது. 

கடந்த 3ம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 2 கோடி பணம் எடுத்துக் கொண்டு பெரம்பலுார்– அரியலுார் சாலையில் பேரளி சுங்கசாவடி அருகே காரில்  சென்ற போது பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். இதற்கும் போட்டுக் கொடுத்தது தான் காரணம். அதிகாரிகள் கார் உள்ளே சோதனை செய்த போது பணம் எதுவும் இல்லை. ஏழைகளுக்கு எடுத்து செல்லும் பணம் என்பதால் பத்திரமாக பதுக்கி வைத்திருந்தனர். ஆனால்க போட்டுக் கொடுத்தவர் மீதுள்ள நம்பிக்கையில், அதிகாரிகள் புதிகாக இருந்தாலும் கூட கார் கதவை பிரித்த போது( பின்னால் உள்ள பகுதியை கழட்டிய போது) அதன் உள்ளே பணம் பல் இளித்தது. 

இதே போல துாத்துக்குடி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணைவீட்டிலும், சென்னை காண்ட்ராக்டர் தஞ்சை சபேசன் போன்றவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்காது, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு ஆகிவற்றைக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் கட்சி அது. ஏதோ, பீரோ இல்லாத குறையால் சாக்குமூட்டையில் கட்டியிருந்ததையும், நிதி நிறுவனத்தின் பெயரால் மக்கள் ஏமாந்த தொகையை, தேர்தல் பெயரால் அவர்களுக்கே திருப்பி கொடுக்க நினைத்ததையும் தவறாக புரிந்து கொண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தி இருப்பது அவர்கள் நேர்மையை சதேகிக்க வைக்கிறது. திமுகவினர் ஓட்டுக்கு அதிமுக பணம் கொடுக்கிறார்கள் என்று காட்டு கத்தல் கட்சியும் வருமானவரித்துறை திரும்பி கூட பார்க்க வில்லை. 

தேர்தல் கமிஷனர்கள் சுசில் சந்திரா, அசோக் லாவாஷா, இயக்குனர்கள் திலிப் சர்மா திரேந்திர ஓஜா ஆகியோர் கடந்த  2ம் தேதி இரவு சென்னை வந்தார்கள். அவர்களிடம் திமுக சார்பில் கல்வியாளர் ஒருவர் வீட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி உள்ளனர்.  அமைச்சர் வேலுமணியின் பினாமி தஞ்சை சபேசனிடம் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்கே எங்கே பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்றெல்லாம் பட்டியல் போட்டு புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தேர்தல் ஆணையம் என்பதை பொருத்து தான் நேர்மையின் நிறம் கறுப்பா இல்லையா என்பது தெரிய வரும். 

இதைத்  தாண்டி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் 120 பேர் போட்டியிடுகின்றனர். இதுவரையில் பிடிபட்டவர்களை வைத்து பார்ததாலே  மொத்த தொகை பல ஆயிரம் கோடிகளை தாண்டும். இவ்வளவு முதல் போட்டு தேர்தலில் வெற்றி பெறும் 40 பேர் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நாம் நம்புகிறோமே நம்மை விட.... யாரும் இப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். கக்கன் வாழ்ந்த பூமி இது என்பதற்கே வெட்கமாக இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close