தேர்தலுக்கு முன் 2 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி !

  டேவிட்   | Last Modified : 05 Apr, 2019 12:18 pm
pm-modi-s-visit-to-tamilnadu-before-the-election

தமிழக தேர்தல் தேதிக்கு முன், பிரதமர் மோடி இரண்டு முறை தமிழகம் வரவுள்ளார் எனவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் பாஜக மாநில செயலாளர் கே.டி ராகவன் தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செயலாளர் கே.டி ராகவன், தமிழக தேர்தல் தேதிக்கு முன், பிரதமர் மோடி இரண்டு முறை தமிழகம் வரவுள்ளார் என தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். 

பொன்.ராதாகிருஷ்ணன் வானகத்தை தேர்தல் பறக்கும் படை சோதனையிட்ட போது, அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார் எனவும், பொதுமக்களும் வாகன சோதனையின் போது முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close