இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியிருக்க கூடாது: தினகரன்

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 02:16 pm
hindu-leaders-should-not-have-attacked-dinakaran

திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்தவர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியிருக்க கூடாது. அவதூறாக பேசினால் வழக்கு தொடரலாமே தவிர தாக்குதல் நடத்த கூடாது என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று தினகரன் அளித்த பேட்டியில் மேலும், ‘தமிழகம் அமைதி பூங்காவாக திழழ்ந்து வருகிறது. இது போன்ற தாக்குதல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். தாக்குதல் நடத்துபவர்களுக்கு தான் இது ஆபத்தாக முடியும். தோல்வி பயத்தின் காரணமாக அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது ஆளுங்கட்சியினரால் வழக்கு தொடுக்கப்படுகிறது’ என்றார்.

மேலும், ‘துரை முருகன் வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தது தவறு தான். தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளை மட்டும் குறி வைத்து சோதனை செய்கிறார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கனின் இடங்களிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்று தினகரன் பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close